எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி : சர்வாதிகாரி போல் பிரதமர் மோடி செயல்படுகிறார் என்பதை உணர்த்துவதற்காக, ஹிட்லர் போல் உடை, வேடம் அணிந்து தெலுங்குதேசம் எம்.பி. நரமள்ளி சிவபிரசாத் நேற்று பாராளுமன்றத்துக்கு வந்தார்.
ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்காமல் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ஏமாற்றிய நிலையில் தெலுங்குதேசம் கட்சி பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியது. இந்த நிலையில், தெலுங்குதேசம் கட்சியின் எம்.பி. நரமள்ளி சிவபிரசாத், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து ஒவ்வொரு நாளும் விதவிதமாக வேடம் அணிந்து, ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி வலியுறுத்தி வருகிறார். நேற்று ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் வேடம் அணிந்து வந்து பாராளுமன்றம் வந்தார்.
பிரதமர் மோடி சர்வாதிகாரி ஹிட்லர் போல் நடந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் அவர் வேடம் அணிந்து வந்ததாக் கூறப்பட்டது.
நம்முடைய ஜனநாயகத்தில் மக்களின் ஆசைகளையும், எதிர்பார்ப்புகளையும் ஆட்சியாளர்கள் அறிந்து கொள்வது அவசியம். என்னுடைய கருத்துக்களை இப்படி பல்வேறு வேடங்களை அணிந்து தெரிவிக்கிறேன் என்று சிவபிரசாத் தெரிவித்தார்.
திரைப்படங்கள், நாடகங்களில் நடந்த அனுபவரான சிவபிரசாத் மத்திய அரசை ஈர்க்கும் வகையில், பெண்வேடம், ஆஞ்சநேயர், மாடு மேய்ப்பவன், பாஞ்சாலி, முஸ்லிம் வேடம், ஸ்வச்பாரத் சேவகர் என பல்வேறு வேடங்களில் வந்து ஆந்திரமாநில கோரிக்கையை வலியுறுத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |