உலகிலேயே மிக உயரமான மின் கோபுரங்களை அமைக்கும் சீனா

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018      உலகம்
china-2018-08-16

பெய்ஜிங்,உலகின் மிக உயரமான மின்கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை சீனா ஆரம்பித்து இருக்கிறது.
ஆசியாவிலேயே மிக அதிக பரப்பளவை கொண்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக சீனா உள்ளது.

பரப்பளவின்படி சீனா மூன்றாவது பெரிய நாடாக உள்ளது. இந்நிலையில், உலகின் மிக உயரமான மின்கோபுரம் அமைக்கும் பணிகளை சீனா தொடங்கியுள்ளது. ஷிஜியாங் மாகாணத்தில் உள்ள சௌஷான் நகரத்தில் இந்த மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

சுமார் 380 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்டு வரும் இந்த மின் கோபுரங்களில், தற்போது 300 மீட்டர் உயரத்திற்கான கட்டுமானப் பணியில் அந்நாட்டு பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது அமைக்கப்பட்டு வரும் இரு மின் கோபுரங்களுக்கு இடையே எந்த பிடிமானமும் இல்லாமல் ஏறத்தாழ 2 ஆயிரத்து 656 மீட்டர் நீளத்திற்கு வயர்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதுதான் உலகிலேயே அதிக தூரம் பிடிமானம் இல்லாமல் செல்லும் வயர்கள் ஆகும்.

இந்தக் மின்கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை மக்கள் அதிக அளவில் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

பல திட்டங்களை மனதில் வைத்து இந்த கோபுரத்தை அந்நாடு அமைக்கிறது. ஆனால் அதுகுறித்த விவரங்களை வெளியிடவில்லை.

Seema Raja - Movie Review | Sivakarthikeyan | Samantha | keerthy suresh

Seema Raja | Public Review Opinion | சீமராஜா திரைப்படம் ரசிகர்கள் கருத்து

Kozhukattai Recipe in Tamil | Modak Kolukattai Recipe in Tamil | Pooranam Recipe | Sweet Kolukattai

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து