முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்பை விமர்சித்து வரும் பிரெனின் பதவி பறிப்பு- அதிரடிப் படை முன்னாள் தளபதி கண்டனம்

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை விமர்சித்து வரும் சி.ஐ.ஏ. முன்னாள் இயக்குநர் ஜான் பிரெனனின் சிறப்பு அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதற்கு அந்த நாட்டின் கடல் அதிரடிப் படையின் (நேவி சீல்) முன்னாள் தளபதி வில்லியம் மெக்ரேவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இவர், பாகிஸ்தானில் கடல் அதிரடிப் படையினர் அல்-காய்தா தலைவர் பின் லேடனைச் சுட்டுக் கொன்ற போது அந்தப் படையின் தளபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் மெக்ரேவன் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளதாவது:- நாட்டுக்காக மிகச் சிறந்த சேவையாற்றிய அதிகாரிகளில் ஜான் பிரெனனும் ஒருவர். அவரைப் போல அமெரிக்காவின் நலன்களுக்காக உழைத்தவர் வெகு சிலரே ஆவர். ஜான் பிரெனனைப் பற்றி தெரியாதவர்ககளைத் தவிர வேறு யாரும் அவரது நேர்மையை சந்தேகிக்க மாட்டார்கள். ரகசிய ஆவணங்களைப் பார்வையிடும் சிறப்பு அதிகாரத்தை அவரிடம் இருந்து பறிப்பது சரியென்றால், எனது சிறப்பு அதிகாரத்தையும் பறித்துக் கொள்ளுங்கள் என்று மெக்ரேவன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து