முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்புகிறது

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

திருவனந்தபுரம் : மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்புகிறது. அங்கு மழை குறைந்து விட்டதாக முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை கடந்த 10 நாட்களுக்கு மேலாக கேரள மாநிலத்தை புரட்டிப் போட்டு விட்டது என்றே சொல்லலாம். இம்மாநிலத்தில் பெய்த மழைக்கு இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடு,வாசல்களை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இந்த மாநிலத்திற்கு இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளும் தங்கள் உதவிக்கரத்தை நீட்டியுள்ளன. தற்போது அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தெய்வாதீனமாக அங்கு மழையும் குறைந்து விட்டது. இதையடுத்து கேரளத்தில் மெல்ல மெல்ல மக்களின் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இத்தகவலை முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்தார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் விமானப்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு குழந்தை மற்றும் அவரது தாயை விமானப் படையினர் மீட்டனர். மற்றொரு இடத்தில் மொட்டை மாடியில் சிக்கியிருந்த ஒரு குழந்தையை மீட்டு அவரது தாயிடம் விமான படையினர் ஒப்படைத்தனர். கொச்சி பல்கலைக் கழகத்தில் சமையல்கூடம் அமைக்கப்பட்டு மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. பாலக்காட்டில் மண் சரிந்த இடத்தில் அவற்றை சரி செய்யும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் சென்ற வண்ணம் உள்ளன. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சில தனியார் விமான நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி கொள்ளையடிக்கின்றன. இந்த நிறுவனங்களுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிப்பது பற்றி பொதுமக்கள் புகார் கொடுக்கலாம் என்று விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து