டென்னிஸ் அரையிறுதியில் பெடரர், ஜோகோவிச் முன்னேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Federer-Jokovic 2018 8 19

வாஷிங்டன் : சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு ரோஜர் பெடரர், ஜோகோவிச், சிமோனா ஹலேப் உள்ளிட்டோர் முன்னேறியுள்ளனர்.

யு.எஸ். ஓபன் சாம்பியன் போட்டிக்கு தயாராகும் வகையில் நடைபெறும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பல்வேறு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். தற்போது காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி சுற்று நடக்க வேண்டியுள்ளது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச் 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் மிலோஸ் ரனோயிக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதியில் மரின் சிலிக் 7-6, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் பாப்லோ கர்னேவா வென்றார். உலகின் இரண்டாம் நிலை வீரர் ரோஜர் பெடரர் 6-7, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். டேவிட் கோபின் 7-6,. 7-6 என நேர்செட்களில் டெல் பொட்ரோவை வீழ்த்தினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல்நிலை வீராங்கனை சிமோனா ஹலேப் 6-4, 6-1 என்ற நேர் செட்களில் லெஸியா சுரேன்கோவை வீழ்த்தினார். முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் பெட்ராவிட்டோவா 7-5, 5-7, 6-3 என எலிஸ் மெர்டன்ஸை வென்றார். கிகி பெர்டன்ஸ் 6-4, 6-3 என விட்டோலினாவை வென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து