முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய மல்யுத்தப் போட்டி: தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Image Unavailable

ஜகார்த்தா : ஆசிய விளையாட்டு மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா (65 கி.கி.,) தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

• 18-வது ஆசியப் போட்டிகள் 2018 நேற்று முன்தினம் மாலை ஜகார்த்தாவில் கோலாகலமாகத் தொடங்கியது. முதல் ஆசியப் போட்டிகள் கடந்த 1951-ல் டெல்லியில் தொடங்கி நடைபெற்றது. அதன்பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முடிவின்படி 18-வது ஆசியப் போட்டிகள் இந்தோனேஷியாவுக்கு ஒதுக்கப்பட்டன.

இதன் வரலாற்றிலேயே முதன்முறையாக இரு நகரங்களில் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங்கில் போட்டிகள் நடக்கின்றன. 45 நாடுகளைச் சேர்ந்த 10000 வீரர் வீராங்கனைகள், அதிகாரிகள், நிர்வாகிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இதில் ஆண்களுக்கான 65 கி.கி., எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டி நேற்று  நடந்தது. இதில் இந்தியாவின் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பங்கேற்றார். போட்டியில் உஸ்பெகிஸ்தானின் சிரோஜிதின் கசானோவை வீழ்த்திய பஜ்ரங், காலிறுதியில் 4-1 என, தஜிகிஸ்தானின் அப்துல்கோசிமை வீழ்த்தினார். பின் அரையிறுதியில் அசத்திய பஜ்ரங் 4-0 என, மங்கோலியாவின் பாட்சுலுானை தோற்கடித்தார்.

பைனலில் பஜ்ரங், ஜப்பானின் டைசி டகாடனி மோதினர். இதில் பஜ்ரங் 10-8 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். இது, இந்த சீசனில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து