முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரியில் தண்ணீர் திறப்பு குறைப்பு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 80 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

மேட்டூர் : கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 50 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த‌ ஜூன் மாதம் முதல் ஜூலை வரை தென்மேற்கு பருவமழை பெய்தது. இதனால் காவிரியின் குறுக்கேயுள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய 4 அணைகளும் ஜூலை இறுதியில் நிரம்பின. இதையடுத்து தமிழகத்துக்கு அதிகளவில் நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை கடந்த மாதம் நிரம்பியது.

தவறவிடாதீர்

சேமிக்க வழியில்லாததால் 10 நாட்களில் கொள்ளிடம் வழியாக 90 டிஎம்சி காவிரி நீர் வீணாக கடலில் கலந்தது.  இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட இடங்களில் கன‌மழை பெய்தது. இதேபோல், கேரள மாநிலம் வயநாட்டில் பலத்த மழை காரணமாக கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதல் நீர் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2.30 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு 2.05 லட்சம் கனஅடி நீர் வந்தது.

80 ஆயிரம் கன...

இந்நிலையில், நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.25 அடியாகவும், நீர் இருப்பு 92.28 டிஎம்சியாகவும் உள்ளது. நீர் திறப்பு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து