இராமேஸ்வரத்தில் 150 கிலோ தடைசெய்யப்பட்ட பான் மசாலா,குட்கா பறிமுதல்: ஒருவர் கைது:

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2018      ராமநாதபுரம்
rms news

இராமேஸ்வரம்-,   இராமேஸ்வரத்தில் போலிஸார் நடத்திய அதிரடி சோதனையில் 150 கிலோ தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றம் குட்கா போன்ற போதை பாக்குகள் சிக்கியது, விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை போலிஸார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
 இராமேஸ்வரம் பகுதியில்   தடைசெய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்கா போன்ற போதைப் பொருள்கள் அதிகளவில் விற்பனை செய்து வருவதாக துறைமுக போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அதன் பேரில் போலிஸார்கள்  துறைமுகம் அருகே உள்ள கடைகளில் தீவிர  சோதனை  நடத்தினர். அப்போது விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான கடையில்  சுமார் 150 கிலோ கொண்ட மூன்று மூட்டைகளில் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா போன்ற போதை பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.அதன் பின்னர் போலீஸார்கள் போதை பாக்குகளை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர் விஸ்வநாதனை கைது செய்தனர்.பின்னர் காவல் நிலையத்தில் வைத்து போலீஸார்கள் விசாரணை செய்ததில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா ஆகிய போதை பாக்குகளை மதுரையில் இருந்து வாங்கி லாரிகள்  மூலம் பார்சலில்  இராமேஸ்வரத்திற்க்கு வியாபாரிகள் கொண்டு  வருவதாகவும்,  பின்னர் கோவில் மற்றும் இராமேஸ்வரம் தீவு முழுவதும் உள்ள சிறு கடைகளுக்கு விற்பனைக்காக குட்கா சப்பளை செய்து வருவதாக தெவித்துள்ளார்.மேலும்  மதுரையில் இருந்து அனுப்பும் மொத்த வியாபாரி குறித்த தகவல்கள் ஏதும்  தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.அதன் பின்னர் போலீஸார்கள் விஸ்வநாதன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இராமேஸ்வரம் தீவு முழுவதிலும் உள்ள கடைகள் மற்றும் தனியார் குடோன்களில் போலிஸாரால் தொடர்ச்சியாக  அதிரடி சோதனைகள் நடத்தப்படும்.சோதனையில் தடைசெய்யப்பட்ட போதை பாக்குள் விற்பனை செய்வதாக  தெரிந்ததால் கடையின் உரிமை ரத்து செய்யப்படுவதோடு கடையின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட போதை பாக்குகளின்; மதிப்பு ரூபாய் 50,000  என போலிஸார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து