பிரதமர் மோடி - சீனப் பாதுகாப்பு துறை அமைச்சர் பெங்கி சந்திப்பு

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018      உலகம்
pm meet chinese defence minister 2018 8 22

புது டெல்லி : 4 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ள சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வெய் பெங்கி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
இந்தியா வந்துள்ள சீனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெய் பெங்கி, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று முன்தினம் சந்தித்தார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

வெய் பெங்கி, பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினர்.

சர்வதேச அளவிலான ஸ்திரதன்மைக்கு இந்தியா - சீனா இடையேயான நல்லுறவு முக்கிய காரணியாக விளங்குகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்புத் துறை உள்பட பல்வேறு துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு அதிகரித்து வருவதாகவும் கூறிய அவர், இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் அமைதியான சூழலை நிலவச் செய்ய வேண்டும் என்றார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து