முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய விளையாட்டு போட்டிகள்: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 4-வது தங்கம்

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Image Unavailable

பாலெம்பேங் : ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது.

5-வது தங்கம்...

45 நாடுகள் பங்கேற்றுள்ள 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்து வருகிறது. போட்டியின் 3-வது நாளில் இந்தியா ஒரே நாளில் 5 பதக்கங்களை அள்ளியது. இந்த நிலையில், நேற்றும் இந்தியாவின் பதக்க வேட்டை நீடித்தது, மகளிர் 25 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில், இந்தியாவின் ராஹி சர்ன்பட் தங்கம் பதக்கத்தை தட்டிச்சென்றார். ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா வெல்லும்  5-வது தங்கம் இதுவாகும்.

இந்தியா தற்போது வரை 4 தங்கம், 3 வெள்ளி, 4  வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களுடன் 6-வது இடத்தில் உள்ளது. 32 தங்கம், 21 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 65 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து