மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.3 க்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் சாலைப்பணிகள் ஆணையாளர் அனீஷ் சேகர் ஆய்வு

வியாழக்கிழமை, 23 ஆகஸ்ட் 2018      மதுரை
mdu pro news

 மதுரை- மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.3 க்கு உட்பட்ட பகுதிகளில்    ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலைப்பணிகளை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்.    ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.3 க்கு உட்பட்ட பகுதிகளில் இடைவெளி நிரப்பும் திட்டத்தின் கீழ் (ஐபுகுகு) வார்டு எண்.54 டீச்சர்ஸ் காலனி ஆனந்தா நகர், ஸ்ரீராம் நகர், டீச்சர்ஸ் காலனி குறுக்குத் தெரு ஆகிய பகுதிகளில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள தார் சாலை பணியினையும், வார்டு எண்.50 கல்பாலம் முதல் குருவிக்காரன் சாலை சந்திப்பு வரை  உள்ள வைகை தென் கரை சாலையில்  ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை பணியினையும் என மொத்தம் ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள தார் சாலை பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது வைகை தென்கரை பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரங்களில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். டீச்சர்ஸ் காலனி குறுக்குத் தெருவில் சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பழுதான இருசக்கர வாகன பழுது நீக்கும் கடைக்கு ரூ.5000 அபராதம் விதிக்கவும், உடனடியாக அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து பூங்கா முருகன் கோவில் சுற்றுச்சுவரை அகற்றி சாலை அகலப்படுத்தும் பணியினை ஆய்வு செய்து சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்த கூடாது எனவும், மீறி நிறுத்துபவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை பலகை வைக்குமாறும் கூறினார். மேலும் மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பழ மார்க்கெட்டில் நடைபெற்று வரும் இறுதி கட்டப் பணியினையும், சுவற்றில் வரையப்படும் மதுரை கலாச்சார ஓவியங்களையும் பார்வையிட்டு விரைவில் பணிகளை முடிக்க உத்தரவிட்டார். 
 இந்த ஆய்வின் போது உதவி ஆணையாளர்கள்; .க.நாராயணன், திரு.பழனிச்சாமி, செயற்பொறியாளர்கள்  .சந்திர சேகர், .ராஜேந்திரன், உதவி ஆணையாளர் (வருவாய்)  ஆ.ரெங்க ராஜன், மக்கள் தொடர்பு அலுவலர்  சித்திரவேல், உதவி செயற்பொறியாளர்கள்; .ஷர்புதீன்,  .அலெக்ஸ்சாண்டர்,  சுகாதார அலுவலர்  .நாகராஜ்; உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து