முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்போன் உற்பத்தி: இந்தியா 2வது இடம்

வெள்ளிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2018      வர்த்தகம்
Image Unavailable

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொபைல் ஃபோன்களின் எண்ணிக்கை நடப்பு நிதியாண்டில் 29 கோடியை தொடும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய செல்ஃபோன் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம், செல்போன் தயாரிப்பு தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த நிதியாண்டில் மட்டும் உள்நாட்டில் 22 கோடியே 50 லட்சம் செல்ஃபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், இது நாட்டின் ஒட்டுமொத்த மொபைல் ஃபோன் தேவையில் 80% என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உள்நாட்டில் மொபைல் ஃபோன் உற்பத்தி அதிகரிப்பால் கடந்த சில ஆண்டுகளில் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள அன்னியச் செலாவணியை இந்தியா சேமித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து