முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யு.எஸ். ஓபன் போட்டிகள் இன்று தொடக்கம் - பட்டத்துக்கு குறி வைக்கும் நடால், சிமோனா

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க் : யு.எஸ். ஓபன் டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் உலகின் முதல் நிலை வீரர் நடால், வீராங்கனை சிமானோ ஹலேப் ஆகியோர் தீவிரமாக உள்ளனர்.

4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஆண்டு இறுதியில் நடைபெறும் யு.எஸ். ஓபன் 138-வது போட்டி இன்று தொடங்கி வரும் செப்டம்பர் 9-ம் தேதி வரை நடக்கிறது. நியூயார்க் நகரில் உள்ள பில்லி ஜீன் கிங் தேசிய டென்னிஸ் மைதானத்தில் போட்டிகள் நடக்கின்றன. ஆடவர் பிரிவில் ஸ்பெயினின் நடால், மகளிர் பிரிவில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஆகியோர் நடப்புச் சாம்பியன்களாக உள்ளனர். தற்போதுள்ள 32 வீரர்கள் தரவரிசை என்பது அடுத்த 2019-ம் ஆண்டு 16 ஆக மாற்றப்படுகிறது.

ஆடவர் பிரிவில் நடப்பு சாம்பியன் நடால் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்பில் உள்ளார். அவர் தனது 17கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் 11-ஐ பிரெஞ்சு ஓபனில் தான் வென்றார். கடந்த 2017 இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தி பட்டம் வென்றார்.

முதல் ஆட்டத்தில் டேவிஸ் கோப்பை சக வீரர் டேவிட் பெரரரை எதிர்கொள்கிறார் நடால். அதே நேரத்தில் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல்நிலை வீராங்கனை சிமோனா ஹலேப் பட்டத்தைக் குறி வைத்துள்ளார்.

ருமேனியாவின் சிமோனா தொடர்ந்து மூன்று கிராண்ட்ஸ்லாம் போட்டி இறுதிச் சுற்றில் தோல்வியடைந்தார். எனினும் கடந்த ஜூன் மாதம் நடந்த பிரெஞ்சு ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார். அதன் பின் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார்.

மாண்ட்ரீயல் போட்டியில் பட்டம் வென்ற சிமோனா, சின்சினாட்டி போட்டியில் இரண்டாம் இடம் பெற்றிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து