முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகாலயா இடைத்தேர்தலில் முதல்வர் கான்ராட் சங்மா வெற்றி

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

துரா,  மேகாலயாவில் நடந்த இடைத்தேர்தலில் முதல்வர் கான்ராட் சங்மா வெற்றி பெற்றார்.
மேகாலயா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில், காங்கிரஸ் 21 தொகுதிகள் வென்றது.

பெரும்பான்மை கிடைக்காததால் பா.ஜ.க. மற்றும் மாநில கட்சிகளின் ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சி ஆட்சியமைத்தது. மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ. சங்மாவின் மகனும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான கான்ராட் சங்மா முதல்வராக பதவியேற்றார்.

துரா மக்களவைத் தொகுதி எம்.பி.யான கான்ராட் சங்மா, முதல்வராக பதவியேற்ற 6 மாதத்திற்குள் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட வேண்டும். இதையடுத்து தெற்கு துரா தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவரது சகோதரி அகதா சங்மா ராஜினாமா செய்தார்.

இதேபோல் ராணிகோர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மார்ட்டினும் ராஜினாமா செய்து தேசிய மக்கள் கட்சியில் இணைந்தார்.இந்த இரண்டு தொகுதிகளிலும் கடந்த 23-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

இதில் தெற்கு துரா தொகுதியில் முதல்வர் கான்ராட் சங்மா 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதே சமயம் ராணிகோர் தொகுதியில் தேசிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட மார்ட்டின் தோல்வியடைந்தார். அதன் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் மோர்வின் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஆளும் கூட்டணியின் பலம் 39 ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து