விவாகரத்துக்கு எதிரான வழக்கு:சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      இந்தியா
supreme court 2017 8 3

 புது டெல்லி, விவாகரத்துக்கு எதிரான மேல் முறையீட்டு மனு நிலுவையில் இருந்தாலும், அந்த மனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்த பிறகு செய்து கொண்ட 2-வது திருமணம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ஒருவரை அவரது முதல் மனைவி விவாகரத்து செய்தார். இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு நிலுவையில் இருந்த நிலையில், மனைவியுடனான கருத்து வேறுபாட்டை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொண்டார்.

இதையடுத்து விவாகரத்தை ஏற்றுக் கொண்டு அந்த மனுவை வாபஸ் பெறுவதாக ஐகோர்ட்டில் தெரிவித்தார்.
ஆனால் இதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அவரது மனுவை தள்ளுபடி செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு 2 வாரத்துக்கு முன்பே, இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இதனால், 2-வது திருமணத்திலும் சிக்கல் ஏற்பட்டது.

விவாகரத்து தொடர்பான மேல் முறையீட்டு மனு நிலுவையில் இருந்த போது செய்து கொண்ட திருமணம் செல்லுமா எனக் கோரி அவரது 2-வது மனைவி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவரது மேல் முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட், விவாகரத்துக்கு எதிரான மேல் முறையீட்டு மனு நிலுவையில் இருந்த போது, நடைபெற்ற திருமணம் செல்லாது என தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து அவரது கணவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே மற்றும் எல்.நாகேஸ்வர ராவ் அமர்வு, ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்து, திருமணம் செல்லும் என தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், விவாகரத்தான ஒருவர் வேறு திருமணம் செய்து கொள்ளலாம் என இந்து திருமணச் சட்டத்தின் 15-வது பிரிவு கூறுகிறது. அதேநேரம், விவாகரத்துக்கு எதிரான மேல் முறையீட்டு மனு நிலுவையில் இருந்தாலும், சம்பந்தப்பட்ட தம்பதி தங்கள் பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக் கொண்டு மனுவை வாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்து விட்டாலே வேறு திருமணம் செய்து கொள்ளலாம்.

அந்த மனுவை நீதிமன்றம் முறையாக தள்ளுபடி செய்வதற்கு முன்பே திருமணம் நடந்ததாகக் கூறி அதை செல்லாது என அறிவிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து