அரசியல் பண்பாட்டை தி.மு.க. கடைப்பிடிக்கவில்லை அமைச்சர் ஜெயகுமார் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      தமிழகம்
jayakumar 2018 8 14

சென்னை, கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்திற்கு, அ.தி.மு.க. சார்பில் பங்கேற்க யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருப்பதில் தி.மு.க. அரசியல் பண்பாட்டைக் கடைபிடிக்கவில்லை என்றும் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியுள்ளார்.

அஞ்சலி செலுத்தினேன்...

கருணாநிதிக்கு இரங்கல் கூட்டம் திருநெல்வேலியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. தரப்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. காரணம், இந்த கூட்டம் சம்பந்தமாக அ.தி.மு.க.வுக்கு தி.மு.க. அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை விமான நிலையத்தில் சந்தித்து பேசினார். அப்போது, கருணாநிதி அஞ்சலி கூட்டம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஜெயக்குமார், கருணாநிதி இறந்த போது, முதல்வர் எடப்பாடி, கருணாநிதி உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். உடல் நல்லடக்கத்திலும் அரசு சார்பாக நான் சென்று அஞ்சலி செலுத்தினேன்.

அரசியல் பண்பாட்டை...

இப்படி, கருணாநிதி மறைவின் போது, தமிழக அரசு உரிய மரியாதை வழங்கி அரசியல் பண்பாட்டுடன் நடந்து கொண்டது. ஆனால் தி.மு.க. அரசியல் பண்பாட்டை கடைப்பிடிக்கவில்லை.

அரசியல் பண்பாடு பேணி காக்கப்பட்டு, அவை கடைப்பிடிக்கப்பட வேண்டும். அதனை நாங்கள் செய்திருக்கிறோம். ஆனால் தி.மு.க. கடைப்பிடிக்கவில்லை. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து