ஆசிய விளையாட்டுப்போட்டி: பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து வெள்ளி பதக்கம் வென்று சாதனை

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Spo - PV Sindhu grab Silver in Asian games 1

 ஜகார்தா, ஆசிய விளையாட்டுப்போட்டி தொடரில், பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் பிவி சிந்து தோல்வி அடைந்தார். இதனால் இவருக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.

ஒற்றையர் பிரிவு

18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10-வது நாளான நேற்று நடந்த பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில்,  நம்பர் ஒன் வீராங்கனையான சீன தைபேயின் தாய் ஜூயிங்கை இந்தியாவின் பிவி சிந்து எதிர்கொண்டார்.

சிந்து தோல்வி...

இந்தப்போட்டியில், 21-13,21-16 என்ற செட் கணக்கில் பிவி சிந்து தோல்வி அடைந்தார். இதன்மூலம், பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.

36 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய போட்டி பேட்மிண்டன் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கத்தை பெற்றுத் தந்தார் சாய்னா நெக்வால். அதே பிரிவில் தற்போது பி.வி.சிந்து வெள்ளி பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளது குறிபிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து