முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்தியில் அடுத்து ஆட்சிக்கு வருவது யார் என்பதை அ.தி.மு.க. தான் தீர்மானிக்கும் கரூரில் தம்பிதுரை பேட்டி

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

கரூர், மத்தியில் அடுத்து ஆட்சிக்கு வருவது யார் என்பதை அ.தி.மு.க.தான் தீர்மானிக்கும் என்று தம்பிதுரை தெரிவித்தார்.
கரூரில் சுமார் ரூ.300 கோடி திட்ட மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிட கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்ட மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
கரூர் மருத்துவக் கல்லூரி மெடிக்கல் சிட்டி என்ற அளவிற்கு தரத்துடன் கட்டப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வை வீழ்த்த ஸ்டாலினுக்கு சக்தி கிடையாது.

மேடை பேச்சாளராக பேசுகிறாரே தவிர, பொறுப்புடன் பேசுவதாக தெரியவில்லை. தலைவர் பதவி கிடைத்தது ஒரு பட்டாபிஷேகம் தான். பேராசிரியர் ஸ்டாலினை அறிமுகம் செய்யும் பொழுது கலைஞர் கருணாநிதியின் மகன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்று சொன்னார்.

துரைமுருகனை கூறும் பொழுது அவரது தந்தையின் பெயரை சொல்லவில்லை. கருணாநிதியின் மகன் என்பதற்காகத்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாரே தவிர முயற்சியிலோ, திறமையிலோ வந்ததாக தெரியவில்லை. இது ஒரு வாரிசு அரசியல். மூத்தவர் இருக்க இளையவருக்கு பட்டம் சூட்டப்பட்டுள்ளது.

மக்கள் அ.தி.மு.க. பக்கம் தான் இருக்கிறார்கள். எனவே அ.தி.மு.க.வை ஸ்டாலினால் வீழ்த்த முடியாது. விரக்தியின் காரணமாகவே பி.ஜே.பி.யை வீழ்த்தி விட வேண்டும் என்று கூறி வருகிறார். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெறும் நிலையிலேயே அ.தி.மு.க. உள்ளது.

அகில இந்திய அரசியலை நிர்ணயிக்கக்கூடிய தகுதியை அ.தி.மு.க.விற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா தந்திருக்கிறார். யார் அடுத்து மத்தியில் ஆட்சிக்கு வருவார்கள் என்பதை தீர்மானிக்கக்கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க. பி.ஜே.பி.யின் எல்லா திட்டங்களையம் அ.தி.மு.க. ஆதரிக்கவில்லை.

எங்கு உரிமைக்கு குரல் கொடுக்க வேண்டுமோ அங்கு குரல் கொடுக்கிறோம். தமிழக மக்களின் வளர்ச்சிக்காக பி.ஜே.பி.யோடு உறவோடு இருக்கிறோம். இவ்வாறு தம்பிதுரை தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து