முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளவாறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      சிவகங்கை
Image Unavailable

   சிவகங்கை,சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவின் மூலம் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் முதல் நிலை பரிசோதனை; மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், தலைமையில், அனைத்து கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முதல் நிலை பரிசோதனையை துவக்கி வைத்து தெரிவித்ததாவது,
         சிவகங்கை மாவட்டத்திற்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 3,310, மின்னணு கட்டுப்பாட்டு கருவி 1800 மற்றும் வாக்காளர்களின் வாக்குப் பதிவு குறித்த விபரம் தெரிவது குறித்த இயந்திரம் 1800 வரப் பெற்றுள்ளது. இந்த இயந்திரங்கள் முழுவதும் சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் தகுந்த பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தற்பொழுது மின்னணு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து முதல் நிலை பரிசோதனை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பெங்களுர் பெல் நிறுவனத்திலிருந்து பொறியாளர் திரு.துபே அவர்கள் தலைமையில் பொறியாளர்கள் குழு வருகை தந்து இன்று முதல் இப்பணியினை மேற்கொள்கிறார்கள். இப்பணி 20 நாட்கள் நடைபெறும். இதன் மூலம் மாவட்டத்திற்கு வரப்பெற்ற அனைத்து மின்னணு இயந்திரங்களும் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு அனைத்து இயந்திரங்களும் நல்ல நிலையில் இயங்குகின்ற அளவிற்கு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன்,  தெரிவித்தார்.
           இந்நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் மின்னணு இயந்திர பராமரிப்பு பொறுப்பு அலுவலர்இராம பிரதீபன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ரமேஷ், வட்டாட்சியர் ராஜா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து