மீண்டும் பேச்சுவார்த்தை: வரும் 5-ல் வடகொரியாவுக்கு செல்லும் தென்கொரிய குழு

சனிக்கிழமை, 1 செப்டம்பர் 2018      உலகம்
Flags Of North Korea And South Korea 31-09-2018

பியாங்யாங்,வட,தென் கொரியா அதிபர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நேரத்தை முடிவு செய்ய வடகொரியாவுக்கு தென் கொரியா குழுவை அனுப்ப முடிவு செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பிற்கு கடந்த ஏப்ரல் மாதம் இரு கொரிய அதிபர்களும் சந்தித்துப் பேசினர். இதையடுத்து மே மாதம் இரு தலைவர்களும் சந்தித்து கொண்டனர். இந்நிலையில் இருவரும் இந்த மாதம் சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களை இறுதி செய்ய செப்.5 ல் தென்கொரியக் குழு வடகொரியாவுக்கு செல்கிறது.

இந்தக் குழு அமைதி நடவடிக்கைகள், இருதரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கும் என்றும் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து