முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொத்தம் 5.82 கோடி வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் வெளியீடு பெயர் சேர்த்தல் திருத்தம் செய்ய அக். 31 கடைசி நாள்,

சனிக்கிழமை, 1 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் 5.82 கோடி வாக்காளர்களைக் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அக்டோபர் 31-ம் தேதி வரை 2 மாதங்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்யும் பணிகள் நடக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு கூறினார்.

வரைவு வாக்காளர்...

வாக்காளர் பட்டியலில் தகுதியான நபர்களை சேர்ப்பதற்கான திருத்தப் பணிகள் தொடங்கியது. இதையொட்டி, தற்போது உள்ள வாக்காளர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் பற்றிய விவரங்களைக் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. வாக்குச்சாவடிகள், கிராமசபை, குடியிருப்போர் நலச்சங்கங்களில் இது பார்வைக்கு வைக்கப்படும். மக்கள் அதைப் பார்வையிட்டு, தங்கள் பெயர், விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து, குறைகள் இருப்பின் திருத்தப் பணிக் காலத்துக்குள் மாற்றிக் கொள்ளலாம்.

புதிய வாக்காளர்கள்...

கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியான இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 5 கோடியே 86 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் இருந் தனர். அதுமுதல் தற்போது வரை ஒரு  லட்சத்து 82 ஆயிரம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இறப்பு, தொகுதி மாற்றம் என 5 லட்சத்து 78 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில் தற்போது உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 791 பேர் உள்ளனர். இந்த வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த வரைவு வாக்காளர் பட்டியல் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் நேற்று வெளியிடப்பட்டது.

மனு அளிக்கலாம்...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்ய மாநகராட்சி மண்டல அலுவலகங் கள், டி.ஆர்.ஓ. அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் மற்றும்  வாக்குச் சாவடிகளில் அலுவலக நாட்களில் இதற்கு மனு அளிக்கலாம். www.nvsp.in என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் அக்டோபர் 31-ம் தேதி ஆகும்.

சிறப்பு முகாம்கள்...

இந்த ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் 2 மாதங்கள் நடக்கின்றன. மேலும், வாக்குச்சாவடிகளில் செப்டம்பர் 9, 23, அக்டோபர் 7, 14 என 4 ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாமுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த திருத் தப் பணிகளின்போது அரசியல் கட்சி களின் முகவர்கள் 30 படிவங்கள் மட்டுமே கொண்டுவந்து சேர்க்கலாம் என்று அறிவுறுத்தப்பட் டுள்ளது. பிறகு, விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு, கள ஆய்வு மூலம் இறுதி செய்யப்படும். 2019 ஜனவரி 4-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

வாக்குச்சாவடிகள் உயர்வு

தமிழகத்தில் கடந்த ஆண்டு 65,952 வாக்குச்சாவடிகள் இருந்தன. கிராமப்புறங்களில் 1,200, நகர்ப் புறங்களில் 1,400 வாக்காளர்கள் என்ற அடிப்படையில் வாக்குச் சாவடிகள் கணக்கிடப்பட்டு, இந்த ஆண்டு கூடுதலாக 1,692 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வாக்குச்சாவடிகள் எண் ணிக்கை 67,644 ஆக அதிகரித் துள்ளது. தற்போது திருத்தப் பணிகளின்போது புதிய வாக்காளர்கள் சேர்ந்தால், அதற்கேற்ப வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையும் உயர்த்தப்படும்.

மதுரை மாவட்டத்தில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் நடராஜன் வெளியிட்டார். இதில் ஆண் வாக்காளர்கள் 12 லட்சத்து 44 ஆயிரத்து 739. பெண் வாக்காளர்கள் 12 லட்சத்து 71 ஆயிரத்து 765 பேர். வேறு பாலினம் 110 ஆக மொத்தம் 25 லட்சத்து 16 ஆயிரத்து 614 வாக்காளர்கள் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து