சேலம் பேருந்து விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடி ஆறுதல்

சனிக்கிழமை, 1 செப்டம்பர் 2018      தமிழகம்
cm salem 01-09-2018

சேலம், சேலம் அருகே மாமாங்கம் என்னுமிடத்தில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரை முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் பலியாகினர். பேருந்துகளில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் காயம் அடைந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், சேலம் மாவட்ட கலெக்டர் ரோஹிணி, அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து