தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு மெரினாவில் போராட்டம் நடத்த ஐகோர்ட் தடை தனி நீதிபதி அளித்த உத்தரவும் ரத்தாகிறது

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      தமிழகம்
chennai high court

சென்னை,மெரினா கடற்கரையில் எவ்வித போராட்டங்களையும் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

2017-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றதையடுத்து மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த தமிழக காவல்துறை தடை விதித்தது. இந்நிலையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, மெரினாவில் தொடர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்த போது, மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதியில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தை தவிர 2003-ம் ஆண்டுக்குப் பின் மெரினாவில் போராட்டங்கள் நடைபெறவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி டி.ராஜா, ஒருவருக்கு அனுமதி கொடுத்தால் என்ன? நிபந்தனையுடன் அனுமதி வழங்கி, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், மெரினா கடற்கரையில் போராட தமிழக காவல்துறை விதித்த தடைக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் உத்தரவிட்ட மறுநாளே அதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரண், ஆர். சுப்பிரமணியன், ஏற்கெனவே தமிழக அரசு போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளது. சட்டம் -ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். ஒருவருக்கு அனுமதியளித்தால் தவறான முன்னுதாரணம் ஆகி விடும். அதனால், தமிழக அரசு எடுத்த முடிவு சரியானதுதான் என்று உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
அப்போது, நீதிபதிகள் கே.கே.சசிதரண், ஆர். சுப்பிரமணியன், மெரினாவில் போராட்டம் நடத்துவதற்கு மறுத்து தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போதைய சூழலில் அங்கு போராட்டம் நடைபெற்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் என சுட்டிக் காட்டியிருக்கின்றனர். எனவே, மெரினாவில் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

மெரினாவில் போலீஸார் பாதுகாப்புடன் போராட்டம் நடத்தலாம் என்று தனி நீதிபதி அளித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து