முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் பிரதமர் மோடியிடம் சந்தித்து வாழ்த்து

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

69 பதக்கங்கள்...

இந்தோனேசியாவின் ஜெகார்த்தா நகரில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் நடைபெற்றன. இந்த ஆசிய விளையாட்டில் 572 வீரர், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி பங்கேற்றது. 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என்று மொத்தம் 69 பதக்கங்களை இந்தியா குவித்து பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தை பிடித்தது. இதில் தடகளம் (7 தங்கம் உள்பட 19 பதக்கம்), துப்பாக்கி சுடுதல் (9 பதக்கம்), ஸ்குவாஷ் (5 பதக்கம்) ஆகிய போட்டிகளில் ஓரளவு ஆதிக்கம் செலுத்தியது. இது இந்தியாவுக்கு புதிய வரலாற்று சாதனையாக அமைந்தது.

கலந்துரையாடல்

இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். ஹெப்டத்லானில் தங்கம் வென்ற ஸ்வப்னா பர்மன் மற்றும் தடகளத்தில் பதக்கம் வென்ற டூடி சந்த், ஹீமா தாஸ் உள்ளிட்ட பல்வேறு வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து