பாகிஸ்தான் புதிய அதிபர் 9-ம் தேதி பதவியேற்கிறார்

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2018      உலகம்
Pakistan President 06-09-2018

இஸ்லாமாபாத்,பாகிஸ்தானின் புதிய அதிபராக ஆளும் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சியைச் சேர்ந்த ஆரிப் அல்வி (69) தேர்வு செய்யப்பட்டதை அந்நாட்டு தேர்தல் ஆணையம்  அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து அவர் வரும் 9 -ம் தேதி பதவியேற்கவுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மிகவும் நெருக்கமானவரான ஆரிப், கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே அதில் முக்கியப் பங்காற்றி வருகிறார்.

முன்னதாக, பாகிஸ்தான் அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு  நடைபெற்றது. இதில் மும்முனைப் போட்டி நடந்தது. இதில், ஆரிப் அல்வி வெற்றி பெற்றார். இப்போதைய அதிபர் மம்னுன் ஹுசைனின் 5 ஆண்டு பதவிக்காலம் வரும் 8-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

ஆரிப் அல்வி, கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து