முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெக்சிகோ மாகாணத்தில் குவியலாக கண்டெடுக்கப்பட்ட 166 உடல்கள்

வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோவின் வெராகர்ஸ் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் 166 உடல்கள் குவியலாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மெக்சிகோ போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உடல்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தை தற்போது பாதுகாப்பு காரணங்கள் கருதி எங்களால் கூற முடியாது. போதை பொருட்கள் கடத்துவதற்கு பல வருடங்களாக வெராகர்ஸ் மாகாணம் கடத்தல்காரர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு 250 மண்டை ஓடுகள் இந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. உடல்கள் கைப்பற்றப்பட்டது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

கண்டெடுக்கப்பட்ட உடல்களுடன், ஏராளமான ஆடைகளும், அடையாள அட்டைகளும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக மெக்சிகோ ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெக்சிகோவை பொறுத்தவரை அங்கு போதை பொருட்கள் கடத்தல் அதிகளவு நடைபெறுகிறது. இதன் காரணமாக அங்கு எழும் தொழில் போட்டிக் காரணமாக அங்கு கொலைகள் அதிகளவில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து