சந்திரமுகிக்கு அடுத்து சிறந்த திரைக்கதையில் உருவாகியுள்ள 'காட்டேரி'- ஞானவேல்ராஜா

சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018      சினிமா
katerri

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’. காமெடி வித் ஹாரர் திரில்லரக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் சோனம் பஜ்வா ஏற்கனவே ‘கப்பல்’ என்கிற படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தவர். இவர்கள் தவிர கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், சேத்தன், ஜான்விஜய், ரவிமரியா, மைம் கோபி, லொள்ளுசபா மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘யாமிருக்க பயமே’என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய டீகே இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். படத்தின் ஒளிப்பதிவை விக்கி கவனிக்க, ‘யாமிருக்க பயமே' படத்தில் பின்னணி இசையமைத்த பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குனர் டீகே, வைபவ் சோனம் பஜ்வா, பொன்னம்பலம், சேத்தன், ஜான்விஜய், ரவிமரியா,மைம் கோபி, லொள்ளுசபா மனோகர் மற்றும் படக்குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, "நான் பார்த்த வரையில் இயக்குனர் டீகேவின் திறமையை இங்கே பலரும் குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்றே தோன்றுகிறது..அடுத்து மீண்டும் ஹாரர் படமா என தயங்கிய அவரை நான் தான் வற்புறுத்தி இந்தப்படம் பண்ண வைத்தேன். காரணம் இது வழக்கமான பேய்ப்படம் இல்லை . டீகேவிடம் சூர்யா, விக்ரம் என மாஸ் ஹீரோக்களுக்கான கதைகள் கைவசம் இருக்கின்றன.. 'காட்டேரி' ரிலீஸுக்கு பிறகு அவர் மாஸ் இயக்குனராக மிகப்பெரிய இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடிப்பார். அதேபோல வைபவுக்கும் அவரது திறமைக்கு தீனிபோடும் கதைகள் கிடைக்கவில்லை என்றே சொல்வேன்.. அவரும் கூட, இங்கே குறைத்தே மதிப்பிடப்படுகிறார்" என பேசினார்.

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து