வாஷிங்டன், அமெரிக்காவின் பிரபல இளம் ராப் பாடகரான மேக் மில்லர் மரணமடைந்தார். அவருக்கு வயது 26.
மேக் மில்லரின் மரணம் குறித்து அமெரிக்க போலீஸார் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
மேக் தனது இல்லத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அதிகப்படியான போதைப் பொருளை எடுத்துக் கொண்டதால் அவர் மரணம் அடைந்திருக்கிறார் என்றும் அவரது உயிர் 11.51 மணியளவில் பிரிந்ததாகவும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
மில்லரின் மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் தரப்பில், அவன் இந்த உலகிற்கு ஒரு வெளிச்சம் போல் இருந்தான். உங்களின் அனைத்துப் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. எங்களுடைய தனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும். அவனது இறப்பைப் பற்றி வேறு ஏதும் கூடுதலாகப் பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளனர். நல்ல திறமையான இசைக் கலைஞரை இழந்துவிட்டோம் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.