தேசிய குடிமக்கள் பதிவேடு ராஜ்நாத் சிங் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2018      இந்தியா
Rajnath Singh 09-09-2018

புது டெல்லி,அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு வரைவு பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. மொத்தம் 3.29 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில் 2.89 கோடி பேர் மட்டுமே பதிவேட்டில் சேர்க் கப்பட்டனர். 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டன. இது குறித்து  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் கூறியதாவது:
அசாம் மாநிலத்தில் வெளி நாட்டினரை அடையாளம் காணவே தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உண்மையான இந்தியர்கள் அனைவரும் சேர்க்கப்படுவார்கள். அவர்களின் பெயர்கள் விடுபடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து