சமூக மாற்றம் அவசியம் வெங்கையா அறிவுறுத்தல்

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018      இந்தியா
Venkaiah Naidu 2017 01 10

புது டெல்லி,அடித்துக் கொலை செய்யப்படும் சம்பவங்களைத் தடுக்க சமூக மாற்றம் அவசியம் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.கடந்த ஓராண்டில் 9 மாநிலங்களில் 40 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு செய்தி நிறுவனம்

ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-மதம், சாதி, நிறம், பாலினத்தின் அடிப்படையில் ஒருவரை கொலை செய்பவர்கள் தேசியவாதி கிடை யாது. கும்பலாக சேர்ந்து ஒருவரை அடித்துக் கொலை செய்வதை எந்தவொரு கட்சியுடனும் தொடர்புபடுத்தக்கூடாது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க சமூக மாற்றம் அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து