தொழில் முனைவோர் வழிகாட்டுதல் கருத்தரங்கு ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 12 செப்டம்பர் 2018      ராமநாதபுரம்
12 rmd pro

ராமநாதபுரம்-  ராமநாதபுரத்தில் கல்லூரி மாணவர்கள் தொழில்முனைவோர் வழிகாட்டுதல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கினை கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார்.
 ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட தொழில் மையம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஒருங்கிணைந்து நடத்திய, கல்லூரி மாணாக்கர்களுக்கான தொழில் முனைவோர் வழிகாட்டுதல் தொடர்பான ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கினை கலெக்டர் வீரராகவராவ் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: - தமிழ்நாடு அரசு, சுயவேலைவாய்ப்பினை ஊக்குவித்திடும் வகையில் புதிய தொழில் முனைவோர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கல்லூரி மாணவ மாணவியர்கள் சுயமாக தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் அதற்கான அரசின் மானிய திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பெறும் வகையில் மாவட்ட தொழில் மையம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஒருங்கிணைந்து, நமது மாவட்டத்திலுள்ள பல்வேறு கல்லூரிகளில் ஒருநாள் கருத்தரங்கு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
 குறிப்பாக, இன்றைய தினம்  ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியிலும், 14.09.2018 அன்று கேணிக்கரையில் உள்ள ராமநாதபுரம் அரசு பெண்கள் கலைக்கல்லூரியிலும், 17.09.2018 அன்று பரமக்குடி அரசு கலைக்கல்லூரியிலும், 18.09.2018 அன்று முதுகுளத்தூர் அரசு கலைக்கல்லூரியிலும், 19.09.2018 அன்று திருவாடனை அரசு கலைக்கல்லூரியிலும், 20.09.2018 அன்று கடலாடி அரசு கலைக்கல்லூரியிலும் நடத்தப்படுகிறது. இன்றைய கல்லூரி மாணவர்கள் மிகத் தெளிவாக சிந்தனைகளையுடைய ஆற்றல்மிகு மாணவர்களாக விளங்குகின்றனர். பெரும்பாலான மாணவர்களிடத்தில் படிக்கும் வயதிலேயே எதிர்காலம் குறித்த தீர்க்கமான சிந்தனை இருக்கிறது. இத்தகைய மாணவர்களுக்கு நல்வழி காட்வதே இதுபோன்ற கருத்தரங்கின் நோக்கம். மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்று போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு நிர்வாக பணிகளில் பொறுப்பேற்றல், பன்னாட்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் நேர்முகத்தேர்வுகளில் வெற்றி பெற்று பணியாற்றுதல் என்பதை மட்டுமே வெற்றி என்று கருதிவிட முடியாது.
 இத்தகைய தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனம் தளர்வது அவசியமற்றது. வேலைவாய்ப்பில்லாத மாணவர்கள் தயக்கமின்றி சுயமாக தொழில் துவங்கலாம். இதன்மூலம் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். உதாரணத்திற்கு, தமிழ்நாடு அரசு தற்போது ஒருமுறை பயனடபடுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, சுற்றுப்புற பாதுகாப்பிற்கு உகந்த பொருட்களை உற்பத்தி செய்தல் போன்ற ஆக்கப்பூர்வமாக சிந்தித்து அதனை உற்ப்தி தொழிலாக நடைமுறை படுத்தலாம். இவ்வாறு புதிதாக தொழில் துவங்க விரும்பும் இளைஞர்களை ஊக்குவித்திடும் வகையில் தழில்நாடு அரசு நீட்ஸ் என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. அதேபால மத்திய அரசின் மூலம் பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.இதன்பின்னர் கலெக்டர் வீரராகவராவ் கல்லூரி வளாகத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதோடு, வளாகத்தினை பிளாஸ்டிக் பயன்பாடில்லாத வகையில் பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ப.மாரியம்மாள், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன ஒருங்கிணைப்பாளர் டேனியல் பிரேம்நாத், ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர்.க.மகுதம்மாள். உட்பட அரசு அலுவலர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து