சவுதியில் முதல் முறையாக விமானத் துறையில் பெண்கள்

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018      உலகம்
Saudi Arabia Women in the airline industry 14-09-2018

சவுதி,சவுதியிலேயே முதல் முறையாக பெண்களை இணை விமானிகளாகவும், விமான ஊழியர்களாகவும் பணியில் அமர்த்த உள்ளது ரியாத்தைச் சேர்ந்த விமான நிறுவனம்.

ப்ளைனஸ் என்னும் விமான நிறுவனம் இந்தப் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள அல் ஜசீரா செய்தி நிறுவனம், நாட்டின் மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சவுதி பெண்களுக்கு அதிகாரமளிக்க ப்ளைனஸ் நிறுவனம் விரும்புகிறது. இந்நிறுவனத்தின் இணை விமானிகள் மற்றும் பணிப்பெண்களின் வேலைக்காக இதுவரை சுமார் 1000 சவுதிப் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களில் பொருத்தமானவர்கள் வேலைக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். சவுதியில் விமானத்துறையில் வேலை பார்க்க பெண்களுக்குத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை. எனினும் அத்தகைய வேலைகளில் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த பெண்களே அதிகம் ஈடுபட்டு வந்தனர். இந்நிலை இனி மெல்ல மாறும் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து