முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ந்து பெய்து வரும் கனமழை:பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை

திங்கட்கிழமை, 24 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,பஞ்சாப், ஹரியானா,மாநிலங்களில் தொடர்ந்து 3வது நாளாக மழை பெய்து வருவதால், இம்மூன்று மாநிலங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எனப்படும் கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெற்பயிர்களும், பருத்திச் செடிகளும் வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், பெய்த கன மழை காரணமாக வேளாண் பொருட்கள் அனைத்துமே வெள்ளத்தில் நாசமானதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.மிதமானது முதல் கன மழை வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருப்பதால் பஞ்சாப் மாநிலத்தின் சட்லெஜ், பியாஸ், ராவி ஆறுகளும், ஹரியானாவில் யமுனா நதியிலும், வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அப்பகுதி மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துகொண்டுள்ளது. சாலைப் போக்குவரத்து கடுமையாக உயர்ந்துள்ளது. இது பருவம் தவறிய மழை என்றும், அறுவடை நேரத்தில் பெய்திருக்கும் கன மழை காரணமாக வேளாண் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து