முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமுளி மலைப்பாதையில் மழையால் சாய்ந்த மரங்கள்.வாகன போக்குவரத்துக்கு தடை.

ஞாயிற்றுக்கிழமை, 30 செப்டம்பர் 2018      தேனி
Image Unavailable

கம்பம் - குமுளி மலைப்பாதையில் கன மழையால் மூன்று இடங்களில் மரங்கள் சாய்ந்தன.ஏற்கனவே மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் கூடுதல் சேதம் அடைந்ததாதல் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தடை செய்யப்பட்டு சீரமைப்பு பணியை போக்குவரத்து நிறுத்தப்பட்டு 5 நாட்களுக்கு பின் துவக்கியுள்ளனர்.கம்பம், கூடலு£ர், குமுளி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.இதனால் லோயர் கேம்ப்&குமுளி 6 கி.மீ.மலைச்சாலையில் மாதா கோவில் அருகே மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள் இரண்டு நாட்களுக்கு முன் பெய்த கன மழை வெள்ளத்தால் சரிந்தன.இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு பெய்த கன மழையால் மூன்றாவது வளைவு அருகே மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள் சரிந்ததில் மலைச் சாலை முற்றிலும் சேதமடைந்தது.பல இடங்களில் மரங்கள் சாய்ந்தும் மண் சரிவு ஏற்பட்டும் கிடக்கின்றன.சமீபத்திய மண் சரிவால் பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து வாகனங்களையும் கம்பம்மெட்டு வழியாக கேரளா செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.தற்போது பெய்த கன மழையால் மரங்கள் சாய்ந்து கிடப்பதால் இரு சக்கர வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.மெத்தனம்.போக்கு வரத்து நிறுத்தம் செய்யும் போது அதிகாரிகள் இரண்டு வாரத்தில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு சாலை பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவித்தார்கள்.ஆனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு 5 நாட்களுக்குப் பின் தான் சீரமைப்பு பணி துவங்கப்பட்டுள்ளது இதனால் சாலை பயன்பாட்டிற்கு வருவது அதிகம் நாட்கள் ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து