முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்பந்து லீக் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது கேரளா

ஞாயிற்றுக்கிழமை, 30 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா,இந்தியன் கால்பந்து லீக் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் அதலெட்டிக்கோ கொல்கத்தா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் கேரள பிளாஸ்டர்ஸ் அணி வீழ்த்தியது.

ஐ.எஸ்.எல். 5-வது சீசன் போட்டிகள் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் தொடக்க ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா, இரண்டு முறை ரன்னர் அப் கேரள அணிகள் மோதின.தொடக்கம் முதலே இரு அணிகளும் ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி மேற்கொண்டன. எனினும் முதல் பாதி ஆட்டத்தில் கேரள அணியே ஆதிக்கம் செலுத்தியது. கோலடிக்க மேற்கண்ட அதன் முயற்சிகள் பலன் தரவில்லை. இதனால் முதல் பாதி சமனில் முடிவடைந்தது.
இரண்டாம் பாதியில் 77-வது நிமிடத்தில் கேரள அணியின் மட்டேஜ் போப்லாட்னிக் இந்த சீசன் மற்றும் தனது அணியின் முதல் கோலை அடித்தார்.

பதில் கோலடிக்க ஏ.டி.கே. தீவிரமாக முயன்றும் முடியவில்லை. இதன் தொடர்ச்சியாக 86-வது நிமிடத்தில் கேரள வீரர் ஸ்டோஜனோவிக் இரண்டாவது கோலை அடித்தார். இதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. ஆட்டம் முழுவதும் கேரள அணியின் கையே ஓங்கி இருந்தது. அதே நேரத்தில் கொல்கத்தா அணியின் தற்காப்பு அரண் மிகவும் பலவீனமாக இருந்ததால், கேரள அணியின் கோலடிக்கும் முயற்சி எளிதாக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து