முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுபான்மை மக்களுக்கு அ.தி.மு.க அரசு வழங்கும் திட்டங்களை திருப்பரங்குன்றம் தொகுதி மக்களிடத்தில் எடுத்துரைக்க வேண்டும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      மதுரை
Image Unavailable

மதுரை -     சிறுபான்மை இன மக்களுக்கு கழக அரசு வாரி வழங்கும் திட்டங்களை திருப்பரங்குன்றம் தொகுதி மக்களிடத்தில் எடுத்துரைக்க வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனைக்கூட்டத்தில் பேசினார்
     முதலமைச்சர், துணைமுதலமைச்சர் ஆணைக்கிணங்க திருப்பரங்குன்றம் தொகுதி அவனியாபுரம் பகுதியிலுள்ள 59, 60 ஆகிய வார்டுகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இதற்கு வட்ட கழக செயலாளர் எம்.கருணா தலைமை தாங்கினார். வட்ட கழக செயலாளர் எஸ்.முருகேசன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்திற்கு கழக அம்மா பேரவை செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரை ஆற்றினார்.
      மற்றும் இக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ம.முத்துராமலிங்கம், மதுரை தெற்குதொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான்(எ)செல்வம், மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.தமிழரசன், அவனியாபுரம் பகுதி செயலாளர் முனியாண்டி, கழக அம்மா பேரவை துணைச்செயலாளர் பா.வெற்றிவேல், மாவட்ட கழக துணைச்செயலாளர் அய்யப்பன், மாவட்ட இலக்கிய அணிச்செயலாளர் திருப்பதி, வட்ட கழக செயலாளர் கருத்தமுத்து, அவைத்தலைவர் காசிராமன் மற்றும் முருகன், மூர்த்தி, ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
 அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது
       இங்கு ஏராளமான சிறுபான்மை இன மக்கள் வந்துள்ளீர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சிறுபான்மை இன மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அளித்தார்கள், கிறிஸ்தவ மக்கள் ஜெருசலேம் செல்ல ஆண்டுக்கு ரூ.1 கோடி நிதி வழங்கினார்கள், அதே போல் முஸ்லீம் இன மக்கள் புனித மெக்கா பயணம் மேற்கொள்ள நிதிஉதவி வழங்கினார்கள், அது மட்டுமல்லாது உலமாக்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உருவாக்கினார். இப்படி எண்ணற்ற திட்டங்களை சிறுபான்மை இன மக்களுக்கு தந்திட்டு அவர்களின் வாழ்வை மேன்மை அடையச்செய்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இப்படி அம்மா அளித்த அனைத்து திட்டங்களையும் அம்மாவின் வழியில் முதலமைச்சர் தொடர்ந்து வழங்கி வருகிறார்.
  புனித ரமலான் நோன்பிற்காக 3000 பள்ளிவாசல்கள் பயன்பெறும் வகையில் அரிசியை அம்மாவின் வழியில் முதலமைச்சர் உங்களுக்கு வழங்கினார், அது மட்டுமல்லாது தொடர்ந்து சிறுபான்மை இன மக்களின் நலன் காக்கும் அரசாக இந்த அரசு திகழ்ந்து வருகிறது இங்கு வந்திருக்கும் நமது கழகத்தை சார்ந்த சிறுபான்மை இன மக்கள் முதலமைச்சர் செய்து வரும் சாதனைகளையெல்லாம் அனைத்து பகுதி மக்களிடத்தில் எடுத்துரைக்க வேண்டும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் நூற்றுக்கு நூறு இரட்டை இலைக்குத்தான் சிறுபான்மை இன மக்கள் வாக்களித்தார்கள் என்ற வரலாற்றை கழகத்திற்கு தேடித்தர வேண்டும் என்று அவர் பேசினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து