ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை கொள்முதல்: இந்தியாவை மீண்டும் எச்சரிக்கும் அமெரிக்கா

வெள்ளிக்கிழமை, 12 அக்டோபர் 2018      உலகம்
Donald Trump 21-09-2018

வாஷிங்டன், ஈரான்னிடமிருந்து எண்ணெய் மற்றும் ரஷ்யாவிடமிருந்து எஸ்-400  ஏவுகணைகளை வாங்கும்  இந்தியாவின் திட்டம் இந்திய - அமெரிக்க உறவுக்கு உதவாது என்று  அந்நாடு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர்  கூறும்போது, "அமெரிக்காவின் எதிர்பையும் மீறி ஈரான்னிடமிருந்து 90  லட்சம் பேரல் கச்சா எண்ணெய் மற்றும்  எஸ்- 400 ஏவுகணைகளை ரஷ்யாவிடமிருந்து வாங்கும் இந்தியாவின்  திட்டம்  எந்தவகையிலும் இந்திய - அமெரிக்க உறவுக்கு உதவ போவதில்லை.

இந்தியா  நாங்கள் இந்தியாவின் நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். இதற்கான முடிவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பார்த்துக் கொள்வார்” என தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா மீது பொருளாதராத் தடை விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு, “ அதனை அதிபர்தான் கூற வேண்டும். அதிபருடைய பதிலை நான் கூற முடியாது. நான் வெள்ளை மாளிகை சார்பாகத் தான் பேச முடியும்” என்றார்.

முன்னதாக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து