முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓடும் ரயிலில் கொள்ளை: மத்திய பிரதேசத்தை சேர்ந்த குற்றவாளிகள் 2 பேர் கைது

சனிக்கிழமை, 13 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5.78 கோடி ரொக்கப் பணத்தை கொள்ளையடித்த வழக்கில், மத்தியப் பிரதேசம் மநிலத்தைச் சேர்ந்த 2 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு புறப்பட்ட ரயிலில் இணைக்கப்பட்டிருந்த சரக்கு பெட்டியில் ரூ. 342 கோடி கிழிந்த, சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் 169 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தது. இந்த பெட்டிக்குப் பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய போலீஸார் இருந்தனர். இருப்பினும் கொள்ளையர்கள் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு மொத்தம் ரூ.5.78 கோடி கொள்ளையடித்தனர்.

இச் சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிபிசிஐடியோடு இணைந்து ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படையினர், சேலம் போலீஸார் ஆகியோரும் விசாரணை செய்தனர்.

இருவர் கைது

இந்த வழக்கில், பல கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் பயன்படுத்திய செல்லிடப்பேசி எண்கள் மூலம் சந்தேகத்துக்குரிய வகையில் பேச்சுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த செல்லிடப்பேசி எண்களுடன் தொடர்புடைய பிற செல்லிடப்பேசி எண்கள், அந்த செல்லிடப்பேசி எண்கள் மூலம் ஏற்கெனவே நடத்தப்பட்ட உரையாடல்கள் ஆகியவற்றை போலீஸார் கேட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் அந்த நபர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கையில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டு வந்தனர். இதற்காக சிபிசிஐடி போலீஸார் மத்தியப் பிரதேச மாநிலத்தில் முகாமிட்டு, மத்தியப் பிரதேச போலீஸார் உதவியுடன் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.  இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ், ரோகன்பார்தி ஆகிய இருவரை சென்னையில் சிபிசிஐடி போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து