வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

புதன்கிழமை, 17 அக்டோபர் 2018      தமிழகம்
Chennai Meteorological Center2018-08-05

சென்னை : கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வந்த நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளல் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. 

20-ம் தேதி முதல் பருவமழை

அண்ணா சாலை, சேப்பாக்கம், வேளச்சேரி, திருவான்மியூர், அடையாறு, பரங்கிமலை, மீனம்பாக்கம், ஆலந்தூர், ஆதம்பாக்கம், பொன்னேரி, சோழவரம், மீஞ்சூர், செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், காற்று மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை உருவாகி வருகிறது. எனவே வரும் 20-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து