முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் : பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி

சனிக்கிழமை, 20 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலில் தெற்கு காஷ்மீரில் பா.ஜ.க அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலை, முக்கியக் கட்சிகளான தேசிய மாநாடு மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சிகள் புறக்கணித்துள்ளன.

ஜம்மு -காஷ்மீரில் நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கான நகர உள்ளாட்சித் தேர்தல் நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டது. ஊராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நவம்பர் 17, 20, 24, 27, 29, டிசம்பர் 1, 4, 8, 11 ஆகிய தேதிகளில் 9 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினர். முழு அடைப்பு போராட்டமும் நடத்தினர். இதேபோல், பிரதான கட்சிகளான தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி தேர்தலைப் புறக்கணித்ததன. இதனால், மொத்தம் 79 நகராட்சிகளுக்கு நடைபெற வேண்டிய தேர்தல் 52 இடங்களில் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தல் நடைபெற்ற நகராட்சிப் பகுதிகளில் மொத்தமுள்ள 598 வார்டு உறுப்பினர் பதவிகளில் 231 வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 181 வார்டுகளில் யாருமே போட்டியிடவில்லை. இந்த 4 கட்டத் தேர்தலிலும் சராசரியாக மொத்தம் 35.1 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகின.

தீவிரவாதிகள் ஆதிக்கத்தில் உள்ள தெற்கு காஷ்மீரில் பா.ஜ.க அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இங்கு மொத்தமுள்ள 132 வார்டுகளில் 53 வார்டுகளில் பா.ஜ.க. பெற்றுள்ளது. மேலும் சில வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.

அனந்தநாக், குல்காம், புல்வாமா, சோபியான் ஆகிய நான்கு மாவட்டங்களும் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளன. இந்த மாவட்டங்களில் தற்போது நடைபெற்றுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 20 நகராட்சிகளை பா.ஜ.க. கைப்பற்றும் சூழல் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து