தரமான பொருள்களை மிக குறைந்த விலையில் வழங்கிட அரசு கவனம் எடுத்து செயல்பட்டு வருகிறது அமைச்சர் ஜி. பாஸ்கரன் தகவல்

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018      சிவகங்கை
22 baskeran news

சிவகங்கை,-  சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மூலம் சிறு பல் பொருள் விற்பனை அங்காடி துவக்க விழா நிகழ்ச்சி சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன் முன்னிலையில் கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் திறந்து வைத்து பேசுகையில்
         இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஒவ்வொரு முறையும் முதல்வராக இருந்த கால கட்டத்தில் கூட்டுறவுத்துறைக்கு தனி;கவனம் எடுத்து தேவையானநிதிகளை வழங்கி புதிய திட்டங்களை செயல்படுத்தி வந்தார் காரணம் அடித்தட்டு மக்களின் தேவைகளை நேரில் சென்று உடனுக்குடன் வழங்கும் துறை கூட்;டுறவு துறைதான். இன்றைய காலகட்டத்தில் கிராம பகுதிகளில் சிறந்த வங்கியாக செயல்படுவது கூட்டுறவு வங்கிதான். அந்த அளவிற்கு இன்றும் கிராம பகுதி மக்கள் முழு பயன்பாட்டில் இருந்துவருகின்றன. அதுமட்டுமின்றி ;விவசாயிகளுக்கு கூட்டுறவு துறை முக்கிய பங்கு வகுகின்றது. விவசாய  காலகட்டங்களில் விவசாயத்திற்கு தேவையான அனைத்த இடு பொருள்களும் சரியான விலையில் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் அடித்தட்டு மக்கள் விவசாய பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என்பது மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நோக்கம்;. அதை தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திட்டங்களை செயல்படுத்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் நடுத்தட்டு மக்களின்  அன்றாட தேவையான பொருள்கள் சரியான விலையில் தரமான பொருள்கள் பெற்றிடும் வகையில் பாம்கோ மூலம் பல்பொருள் அங்காடி அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு தேவையான பொருள்களை வழங்கும் வகையில் இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் இன்று மூன்று சிறு பல் பொருள் அங்காடி மையம் துவக்கப்பட்டுள்ளது.
 மேலும், மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் விரைவில் ஏழு கடைகள் திறக்கப்பட உள்ளன. இதன் மூலம் பொது மக்களுக்கு தேவையான மளிகை பொருள்களில் இருந்து அனைத்து பொருள்களும் மற்ற வணிக நிறுவனங்களை விட குறைந்த விலையில் தரமான வகையில் வழங்கப்படும்.  பொதுமக்களாகிய நீங்கள் பயன்பெற வேண்டும் மேலும் தேவைக்கு ஏற்ப கூடுதலாக பல் பொருள் அங்காடி அமைக்கப்படும்.
       கூட்டுறவு துறையின் மூலம் மேலும் சுழல்நிதி கடன்கள், விவசாய கடன்கள் என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  இப்பகுதி ஒரு விவசாயம் நிறைந்த பகுதி விவசாயத்தினை மட்டுமே நம்பி உள்ள நிலையில் பெண்கள் கூட்டுத் தொழில் புரியும் வகையில் கறவை மாடு மற்றும் ஆடு வளர்த்தல் போன்ற இணை தொழில்;களையும் மேற்கொள்ள வேண்டும் அதற்கு தேவையான கடன் உதவிகளை கூட்டுறவு வங்கி வழங்கி வருகிறது. அது போல் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் சிறப்புடன் செயல்படுத்தும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமும், மாண்புமிகு தமிழ்நாடு துணை  முதலமைச்சர் அவர்களிடமும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் மூலம் சிவகங்கை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் துவங்க உள்ளன.
              அதே போல் துறை வாரியாக மாண்புமிகு அமைச்சர் பெருமக்களையும் சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது அவர்களும் மாவட்டத்திற்கு வருகை தந்து தேவையான திட்டங்களை வழங்க உள்ளார்கள் இது போல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நானும் எனக்கு துணையாக நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களும் இணைந்து செயல்பட்டு வருகிறோம். மற்ற மேனமினிக்கி அரசியல் வாதிகள் போன்று வேசம் போடுபவர்கள் நாங்கள் அல்ல என்றும் மக்களுக்காக உழைக்கக்கூடியவர்கள். காரணம் எங்களை போன்ற எளிய தொண்டர்களை உருவாக்கியது மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அவர்களின் எண்ணப்படி நாங்கள் பதவியில் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி என்றுமே மக்களுக்காக உழைக்கக் கூடியவர்கள் நாங்கள். மக்களின் அத்தியாவசிய தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில் நானும், நாடாளுமன்ற உறுப்பினரும் கிராமம் தோறும் சென்று கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றி வருகிறோம். அதன்படி, உங்களுக்கு தேவையான கோரிக்கைகளை தெரிவித்து அரசின் திட்டங்களை பெற்று சிறப்புடன் வாழ்ந்திட வேண்டும் என மாண்புமிகு கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார். 
பின்னர், பல்பொருள் அங்காடியில் பொதுமக்களுக்கு முதல் விற்பனையினை துவக்கி வைக்கும் வகையில் பொருள்களை மாண்புமிகு கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர்; அவர்கள் வழங்கினார். இதனை தொடர்ந்து என.;ஜி.ஓ காலணி மற்றும் பர்மா காலனியில் கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் அவர்கள் சிறு  பல் பொருள் அங்காடி விற்பனை மையங்களை திறந்து வைத்தார்.
இந்நிகழ்சியில் கூட்டுறவுத் துறை இணை பதிவாளர் ஆரோக்கிய சுகுமார்,  சிவகங்கை மாவட்ட ஆவின் சங்க தலைவர் அசோகன்,  துணை பதிவாளர் (மேலான்மை இயக்குநர் திருவள்ளுவர், காரைக்குடி சரக துணை பதிவாளர் முத்து, பாம்கோ நிர்வாக அலுவலர் கிருஷ்ணன், பாம்கோ பொது மேலாளர் சண்முக வேல், பாம்கோ கூட்டுறவு சங்க துணை தலைவர் காளிதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து