முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் வருகை:

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2018      சிவகங்கை
Image Unavailable

காரைக்குடி- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழத்தின் 31-வது பட்டமளிப்பு விழா 2018, நவம்பர் 1-ஆம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 1.15 மணியளவில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக் கலையரங்கில் நடைபெற உள்ளது. இதுகுறித்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா.நா.இராஜேந்திரன் அவர்கள் தெரிவித்தாவது
தமிழக ஆளுநரும், அழகப்பா பல்கலைக்கழக வேந்தருமாகிய திரு.பன்வாரிலால் புரோகித் அவர்கள் பட்டமளிப்ப விழாவிற்குத் தலைமை வகித்து மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்குகிறார்கள்.
இந்திய அரசின் முன்னாள் முதன்மை அறிவியல் ஆலோசகரும், அணுசக்தி துறையின் தலைவரும், மும்பை பாபா அணு ஆய்வு மையம், இயக்குனருமாகிய பத்மவிபூஷன் முனைவர் ரா.சிதம்பரம் அவர்கள் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார்கள்.
அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. நூ.இரஜேந்திரன் அவர்கள் வரவேற்புரையும், பல்கலைக்கழத்தின் சாதனைகள் பற்றியும் உரை நிகழ்த்துகிறார்கள்.
இந்தப் பட்டமளிப்புவிழாவில் பல்கலைக்கழத்தின் பல்வேறு துறைகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் பயின்று தேர்ச்சி பெற்ற 2435 மாணவ மாணவிகளுக்கும், பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் பயின்று தேர்ச்சி பெற்ற 10290 மாணவ மாணவிகளுக்கும், இணைவுக் கல்வித் திட்டத்தின் கீழ் பயின்று தேர்ச்சி பெற்ற 843 மாணவ மாணிகளுக்கும், தொலைநிலைக் கல்வி வாயிலாகப் பயின்று தேர்ச்சி பெற்ற 15318 மாணவ மாணவிகளைச் சேர்த்து மொத்தம் 28886 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள்   வழங்கப்பட உள்ளது. இவர்களில் மாணவர்கள் எண்ணிக்கை 10178 மாணவிகள் எண்ணிக்கை 18708.
இப்பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழத்தின் பல்வேறு துறைகளில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட 129 ஆய்வாளர்களுக்கும், எம்.பில், பட்ட ஆய்வில் முதல் இடம் பெற்ற 59 மாணவ மாணவிகளும், இளங்கலை பட்டப்படிப்பில் முதல் இடம் பெற்ற 40 மாணவ மாணவிகளும், ஆக மொத்தம் 272 மாணவ மாணவிகள் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களிடம் நேரில் தமது பட்டங்களைப் பெறுகிறார்கள்.
அழகப்பா பல்கலைக்கழக துறைகளுக்கிடையேயான அழகப்பா பல்கலைக்கழக மாணவர்களின் கலைத்திறன் வெளிப்பாட்டு நிகழ்வு -2018 அக்டோபர் 26 முதல் 28 வரை பல்கலைக்கழக லெ.சித.லெ.பழனியப்பச் செட்டியார் நினைவு கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழத்தின் 39 துறைகளிலிருந்து 1335 மாணவ, மாணவிகள் 19 பல்வேறு கலைப் போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்த கலைவிழா போட்டியில் உயிரி தொழில்நுட்பவியல் மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்  பட்டத்தினை வென்றுள்ளனர்.
மேலும் இந்த கலைவிழா நிகழ்ச்சியில், அழகப்பா பல்கலைக்கழத்தில் நாடகக் கலைவியல் துறை வெகுவிரைவில் துவங்கப்பட உள்ளது என துணைவேந்தர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து