முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1.83 லட்சம் முதியோருக்கு வீடுகளுக்கே சென்று ஓய்வூதியம் வழங்க முதல்வர் அறிவுறுத்தல்

புதன்கிழமை, 31 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : 80 வயதை கடந்த 1 லட்சத்து 83 ஆயிரம் முதியோருக்கு வீடுகளுக்கே சென்று ஓய்வூதியம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

மாதாந்திர ஓய்வூதியம்

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-

தமிழ் நாட்டில், சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினரான 60 வயது கடந்தமுதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், வேளாண் தொழிலாளர்கள், ஏழைவிவசாயிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டதிருமணமாகாத பெண்கள் ஆகியோருக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் தற்போது மாதாந்திர ஓய்வூதியத் தொகையாக ரூ.1000/- வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில்சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் நாளது தேதியில் 29,48,527 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். தற்போதைய நடைமுறையின்படி, ஓய்வூதியத் தொகையானது வங்கிகளின் மூலம் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.

அதிகாரிகளுக்கு...

வங்கிஒருங்கிணைப்பாளர்கள் பயனாளிகள் குடியிருக்கும் கிராமத்தில் பொதுவான ஒரு இடத்தில் வைத்து பயனாளிகளுக்கு ஓய்வூதியத் தொகையினை பயோமெட்ரிக் கருவி மூலம் வழங்கி வருகின்றனர். இதற்கு சேவைக் கட்டணமாக பயனாளி ஒருவருக்கு ரூ.30 வீதம் வங்கிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பொது இடங்களில் வைத்து பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் போது கூட்ட நெரிசல் ஏற்படுதல் மற்றும் வயது முதிர்ந்த பயனாளிகளின் கைரேகை தேய்ந்ததன் காரணத்தினால், அவர்கள் ஓய்வூதியம் பெறுதலில் சிரமங்களை தவிர்க்க, வயது முதிர்ந்த பயனாளிகளுக்கு அவரவர்களது வீட்டிற்கே சென்று ஓய்வூதியத் தொகையினை வழங்க சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு பல்வேறு ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டது.

அரசு ஆணை பிறப்பிப்பு

இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 80 வயதினைக் கடந்து ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு அவர்களது வீட்டிற்கே சென்று ஓய்வூதியத் தொகையினை வழங்கும் முறையினை மீண்டும் அஞ்சல் துறை மூலம் கொண்டு வர அறிவுறுத்தினார். தமிழ்நாட்டில் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின்கீழ் 80 வயதைக் கடந்த 1,83,308 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி.யின் அறிவுரைகளின்படி வயது முதிர்ந்த இப்பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பணஅஞ்சல் மூலம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து