முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமர் கோயில் கட்ட சட்டம் இயற்ற வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்.

புதன்கிழமை, 7 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ராமர் கோயில் கட்ட சட்டம் இயற்ற வேண்டும் என மத்திய அரசிற்கு ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இணைச் செயலாளரான மன்மோகன் வைத்யா கூறிய போது, 

ராமர் கோயில், நம் நாட்டின் பெருமை மற்றும் பெருஞ்சிறப்பாக இருக்கும். இதை, குஜராத்தின் சோம்நாத் கோயிலை சர்தார் படேல் மீண்டும் அமைத்ததைப் போல் கட்டப்பட வேண்டும். இதற்காக மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.

மும்பையின் வடக்குப் பகுதியில் உள்ள உதனில் ராம்பாவ் மல்கி பிரபுதனி அறக்கட்டளையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூன்று நாள் கருத்தரங்கை தொடங்கி வைத்து வைத்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது,

இஸ்லாமியர்கள் தம் தொழுகையை மசூதிகளில் நடத்த வேண்டிய கட்டாயம் இல்லை. அதை வீதிகளிலும் நடத்தலாம் என உ.பி. உயர் நீதிமன்றம் கூறி விட்டது. பலவந்தமாகப் பறிக்கப்பட்ட நிலத்தில் கட்டிய மசூதியில் நடத்தும் தொழுகையும் ஏற்கப்படாது. அயோத்தியில் இருந்த ராமர் கோயில் இடிக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. எனவே, நிலத்தை ஆக்கிரமித்து அதை கோயில் கட்டுவதற்காக அளிக்கப்பட வேண்டும். இதற்காக மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து