முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலே முதல் டெஸ்ட் போட்டி: இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

வெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

காலே, காலேயில் நடைபெற்று வந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பென் போக்ஸ் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இலங்கை - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் காலேயில் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அறிமுக வீரர் பென் போக்ஸின் (107) அபார சதத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 342 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை மொயீன் அலி (4), ஜேக் லீச் (2) ஆகியோரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 203 ரன்னில் சுருண்டது.

139 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, தொடக்க வீரர் ஜென்னிங்ஸின் (146 நாட்அவுட்) அபார சதத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஒட்டுமொத்தமாக 461 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் இலங்கை அணிக்கு 462 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து.

காலே டெஸ்டில் நான்காவது இன்னிங்சில் 462 ரன்கள் என்பது சாத்தியமே அல்ல என்ற போதிலும், சொந்த மண்ணில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இலங்கை களம் இறங்கியது. 2-வது இன்னிங்சிலும் மொயீன் அலி சிறப்பாக பந்து வீச இலங்கை அணி 250 ரன்களில் சரணடைந்தது. இதனால் இங்கிலாந்து 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மொயீன் அலி நான்கு விக்கெட்டுக்களும், லீச் 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள். முதல் இன்னிங்சில் சதமும், 2-வது இன்னிங்சில் 37 ரன்கள் சேர்த்த பென் போக்ஸ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. 2-வது டெஸ்ட் கண்டியில் 14-ம் தேதி தொடங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து