முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கு

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2018      விருதுநகர்
Image Unavailable

  விருதுநகர் -ஸ்ரீவி.  கலசலிங்கம்  பல்கலையில்  வணிகவியல் துறை சார்பில் ஒரு நாள் தேசிய  கருத்தரங்கு “ ஆராய்ச்சிக் கட்டுரை  தவறுகளை கண்டறிதல் “ என்ற தலைப்பில்  பல்கலை  துணைத்தலைவர்  முனைவர்  எஸ்.  சசிஆனந்த் தலைமையில் நடைபெற்றது
துணைவேந்தர் முனைவர்  ஆர்.  நாகராஜ்ராம்ராவ் ,  புதிவாளர் முனைவர்    வெ. வாசுதேவன்   ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
துறைத்தலைவர் முனைவர் ஜி.  ரமேஷ்பாண்டி  வரவேற்புரை  வழங்கினார்.
வேலூர்,  ஊர்ஹீஸ் கல்லூரி பேராசிரியர்  முனைவர்  கே.  கிஷோர்  சிறப்பு விருந்தினராகக்கலந்துகொண்டு  கருத்தரங்கை  துவக்கி வைத்து பேசினார்.
அவர் பேசுகையில், ஆராய்ச்சிக்கட்டுரைகளை  பேராசிரியர்கள்  எழுதுவதற்க்கு முன்பே  ஆராய்ச்சிக்கண்டு பிடிப்புகளை  சரிபார்த்து,  ஒப்பிட்டு  புதிய  முறையில்  கிடைத்த  முடிவுகளை மட்டும்  கட்டுரைகளாக வகுத்து  தங்களை  வழிப்படுத்தும்  ஆராய்ச்சியாளர்களை  கலந்தாலோசிக்கவேண்டும்.
பின்னர்  தற்போது  நடைமுறையில் உள்ள  பல்வேறு  கணினி முறைகளில்  அதை பதிவு செய்து  தவறுகளை  கண்டுபிடித்து திருத்தி  எந்த தவறும்,  காப்பியும்  இல்லை  என்ற  முடிவிற்க்கு  வந்த  பின்பு  உயர்ந்த  சர்வதேச  ஆராய்ச்சி மலர்களுக்கு  அனுப்ப வேண்டும் என்று  வலியுறுத்தினார்.
முனைவர்  எஸ்.  பாலமுரளி,  முனைவர் சி. சிவபிரகாசம் ஆகியோர்  வாழ்த்துரை  வழங்கினர்.
கருத்தரங்கில்  பல்வேறு  கல்லூரிகளிலிருந்து  70 ஆராய்ச்சி பட்டம்  பயிலும்  பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள்  கலந்துகொண்டு  பயன்பெற்றனர்.
பேராசிரியர்கள்  முனைவர் எஸ். திருமால்,  கருத்தரங்கை    சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தினர்
முனைவர்  ஏ. எரோனிமஸ் நன்றியுரை  வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து