தகவல் அறியும் உரிமை சட்டம்: போடியை சேர்ந்தவருக்கு சிறந்த பயன்பாட்டாளர் விருது

செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018      தேனி
13 bodi news

போடி, -   தகவல் அறியும் உரிமை சட்டத்தை சிறப்பாக பயன்படுத்தி பயனடைந்த  போடியை சேர்ந்த சமூக ஆர்வலருக்கு சென்னையில் திங்கள் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த பயன்பாட்டாளர் விருது வழங்கப்பட்டது.
     தமிழக அரசு சார்பில் தமிழக தகவல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பலரும் தகவல்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் தகவல் சட்ட 14-ம் ஆண்டு விழாவினை கொண்டாடும் விதமாகவும் அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் பயிற்சி துறை சார்பில் அதிக அளவில் தகவல்களை பெற்று பயனடைந்தவர்களுக்கு விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
     இதற்காக தமிழகம் முழுதும் தேர்வு செய்யப்பட்ட 20 பேருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில் நடைபெற்றது. இதில் போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த அழகர்சாமி மகன் ராமகிருஷ்ணன் என்பவரும் தேர்வு செய்யப்பட்டார். இவர் அதிக அளவில் பொது மக்கள் நலனுக்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்களை அனுப்பி தகவல்களை பெற்று பயனடைந்தவர். இதன் மூலம் வாரிசு சான்று பெற்றுத் தருதல், பேருந்து கட்டணம் குறைப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளார். இந்தியன் குரல் அமைப்பின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளராகவும். சமூக ஆர்வலராகவும் பணிபுரிந்து வருகிறார்.
    ராமகிருஷ்ணனும் விருது பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு திங்கள் கிழமை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக தகவல் ஆணையத்தின் முதன்மை தலைமை தகவல் ஆணையரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான  எம்.ஷீலா பிரியா  விருது மற்றும் ரொக்க பரிசு வழங்கி வாழ்த்தினார். விருது பெற்ற ராமகிருஷ்ணனை இந்தியன் குரல் அமைப்பின் நிர்வாகி சிவராஜ் மற்றும் போடி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து