முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் டி-20 உலககோப்பை போட்டி: ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி - அயர்லாந்துடன் இன்று மோதல்

புதன்கிழமை, 14 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

கயானா : மகளிர் 20 ஓவர் உலககோப்பை போட்டியின் இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது.

‘பி’ பிரிவில் இடம்

மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது. ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய அணி இந்தப்போட்டியில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை 34 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.

‘ஹாட்ரிக்’ வெற்றி...

3-வது ஆட்டத்தில் இந்திய அணி அயர்லாந்தை இன்று எதிர்கொள்கிறது. பலவீனமான அயர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி சமபலத்துடன் உள்ளது. கேப்டன் கவூர் 2 ஆட்டத்தில் 117 ரன்கள் எடுத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடித்து முத்திரை பதித்து இருந்தார். பந்துவீச்சில் பூனம் யாதவ், ஹேமலதா தலா 5 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

‘ஹாட்ரிக்’ தோல்வி

அயர்லாந்து அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்று இருந்தது. ‘ஹாட்ரிக்’ தோல்வியை தவிர்க்க அந்த அணி கடுமையாக போராடும். இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து