முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பிரதேசத்தில் பேருந்தில் திடீரென தீப்பற்றியதால் 4 இ.வி.எம். எரிந்து முற்றிலும் நாசம்

புதன்கிழமை, 8 மே 2024      இந்தியா
MP 2024-05-08

Source: provided

போபால் : மத்திய பிரதேசத்தில் பேருந்தில் திடீரென தீப்பற்றியதால் 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த மாதம் 19, 26 மற்றும் மே 7-ந்தேதி என 3 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற 3-வது கட்ட தேர்தலில் உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஷ்கார், கோவா, மராட்டியம், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு உள்பட்ட 95 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவுபெற்றது. வாக்குப்பதிவு நடைபெற்ற 95 தொகுதிகளில் மொத்தம் 64.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் உள்ள கோலா கிராமத்தில் வாக்குகள் பதிவான எந்திரங்களை ஊழியர்கள் பஸ் மூலம் வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்து சென்று கொண்டிருந்தனர். இரவு 11 மணியளவில் திடீரென அவர்கள் சென்ற பஸ் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக பஸ்சில் இருந்து அனைவரும் வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் பஸ்சில் இருந்த 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் முற்றிலும் எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடித்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து