முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜா புயல் தாக்கிய நேரத்தில் அறுந்து கிடந்த மின்கம்பிகளை அகற்றி பேருந்தை வழிநடத்திய கண்டக்டர்

வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

வேதாரண்யம் : கஜா புயல் கடுமையாக தாக்கிய போது வேதாரண்யத்தை நோக்கி சென்ற பேருந்தின்  கண்டக்டர் வழி நெடுக சாலையில் கிடக்கும் மின் கம்பிகளை அகற்றி பேருந்தை வழி நடத்தி வேதாரண்யம் சென்று சேர்ந்துள்ளார். அவரது செயல் தற்போது வைரலாகியுள்ளது.

கஜா புயல் கடுமையாக தாக்கிய வேதாரண்யத்தில் கடற்கரை சாலையில் போக்குவரத்தை பாதிக்கும் வண்ணம் சாலையில் குறுக்கே செல்லும் மின்கம்பிகள் அறுந்துக் கிடந்தன, மரங்களும் சாலையின் குறுக்கே விழுந்து கிடந்தது. நேற்று காலையில் வேதாரண்யம் நோக்கி சென்ற பேருந்தின் நடத்துனர் சாலையில் குறுக்கே கிடந்த மின் கம்பியை ஈரமாக உடைந்துக் கிடக்கும் மரக்கிளையை வைத்து தூக்கிப் பிடித்து பேருந்தை கடந்துச் செல்ல முயற்சி எடுக்கும் காணொளி காட்சி வைரலாகி வருகிறது.

மின் கம்பியில் ஒருவேளை மின்சாரம் இருந்தால் அவர் உயிர் நொடிப்பொழுதில் போய் விடும் என அறிந்தும் பயணிகளை கொண்டு சேர்க்கும் எண்ணத்தில் அவர் எடுத்த முயற்சி பாராட்டப்படுகிறது.

சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த பாலபைரவன் என்கிற அந்த நடத்துனர் சென்னையிலிருந்து வேதாரண்யம் செல்லும் அரசு போக்குவரத்து பேருந்தில் நடத்துனராக உள்ளார். புயல் அடிக்கும் நேரத்தில் சென்னையிலிருந்து கிளம்பிய பேருந்தில் நடத்துனராக பணிக்கு கிளம்பிய அவர் வழி முழுதும் குறுக்கே கிடந்த மரங்களை, மின் கம்பிகளை அகற்றி பேருந்து செல்ல வழி வகுத்து கொடுத்துள்ளார்.

சாலையில் குறுக்காக கிடந்த உயர் அழுத்த மின்கம்பியை அங்குள்ள ஒரு மரக்கிளையை வைத்து தூக்கிப் பிடித்து பேருந்துச் செல்ல வழி ஏற்படுத்தியதை அங்கு பணியில் இருந்த ஆங்கில தொலைக்காட்சியின் செய்தியாளர் வீடியோவாக எடுத்துள்ளார். அது தற்போது வைரலாகி கண்டக்டருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து